தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் நீரிழிவு நோய் குறித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அதில், இந்தியாவில் 10 கோடி (11.4%) பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 16.4% பேர், கிராமங்களில் 8.9% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கோவாவில் 26.4% பேர், தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 14.4% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒரு கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது.