மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தால் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மே 4 முதல் கலவரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். கலவர சூழல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பிஷ்ணுபூர், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். முன்னதாக, ஊரடங்கு சட்டம் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.