சீனாவில் அறிமுகமாகி உலகெங்கிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்பிளஸ் 13, இந்தியாவில் அடுத்த மாத தொடக்கத்தில் OnePlus 13R உடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மிட்நைட் ஓஷன், பிளாக் எக்லிப்ஸ் மற்றும் ஆர்க்டிக் டான் என மூன்று அழகான வண்ணங்களில் கிடைக்கும். மேலும், இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறனுடன் IP68/IP69 மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
ஒன்பிளஸ் 13-ன் சிறப்பம்சங்கள் பற்றி சொல்லப்போனால், 6.82-இன்ச் QHD+ LTPO OLED டிஸ்ப்ளே, Snapdragon 8 Elite SoC, 16GB வரை ரேம் மற்றும் 1TB சேமிப்பு என சக்தி வாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. மூன்று 50MP கேமரா அமைப்புடன் கூடிய சிறந்த கேமரா அனுபவம், 6000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனை இன்னும் ஈர்க்கக்கூடியதாக மாற்றுகின்றன. ஒன்பிளஸ் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்பவர்களுக்காக 11 ரூபாய்க்கு சிறப்பு ரெட் காயின் திட்டத்தை அறிவித்துள்ளது.