மும்பை: எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க 2 பில்லியன் டாலர்கள் முதலீடு - ஓஎன்ஜிசி

February 24, 2023

இந்தியாவின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளரான ஓஎன்ஜிசி, மும்பையில், 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம், அரபிக் கடல் பகுதியில், கிட்டத்தட்ட 103 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், கூடுதலாக 100 மில்லியன் டன் அளவில் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று ஓஎன்ஜிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஓஎன்ஜிசி நிர்வாக அதிகாரி பங்கஜ் குமார், "அடுத்த 2-3 ஆண்டுகளில், பேசியன் […]

இந்தியாவின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளரான ஓஎன்ஜிசி, மும்பையில், 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம், அரபிக் கடல் பகுதியில், கிட்டத்தட்ட 103 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், கூடுதலாக 100 மில்லியன் டன் அளவில் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று ஓஎன்ஜிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஓஎன்ஜிசி நிர்வாக அதிகாரி பங்கஜ் குமார், "அடுத்த 2-3 ஆண்டுகளில், பேசியன் மற்றும் சாட்டிலைட் (பி & எஸ்) பகுதியில், 103 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும். இதன் மூலம், உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, இறக்குமதி குறைக்கப்படும்" என்று கூறினார். ஏற்கனவே, 2022-ம் நிதி ஆண்டில், மும்பை பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து, 21.68 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயு மற்றும் 21.7 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu