மத்திய அரசின் வரி விதிப்பால் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி

மத்திய அரசு சின்ன வெங்காயத்தின் மீது விதித்துள்ள 40 சதவீதம் வரியால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் விளைவிக்கக் கூடியது. இங்கிருந்து தமிழர்கள் வாழும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதித்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி […]

மத்திய அரசு சின்ன வெங்காயத்தின் மீது விதித்துள்ள 40 சதவீதம் வரியால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் விளைவிக்கக் கூடியது. இங்கிருந்து தமிழர்கள் வாழும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதித்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு முன்னதாக சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விதித்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை முன்னிறுத்தி மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது. ஆனால் பெரிய வெங்காயத்திற்கு மட்டும் வரி இல்லாமல் சின்ன வெங்காயத்திற்கும் சேர்த்து வரி விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது வெங்காய விலை கடுமையாக சரிவை சந்தித்துள்ளது. எனவே மத்திய அரசுக்கு விவசாயிகள் வெங்காயத்திற்கான வரி விதிப்பை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu