ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமானது கவர்னர் ஒப்புதல் இல்லாமல் காலாவதியானது.
இணையவழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் கடந்த மாதம் 19ல் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் சட்ட மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு கவர்னர் தமிழக அரசுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்திற்கு மறுநாளே தமிழக அரசு சார்பில் பதில் அனுப்பபட்டது.
இந்நிலையில் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்குவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது. இறுதிவரை கவர்னர் ஒப்புதல் கையெழுத்து போடவில்லை. இதனால், அரசமைப்பு சட்ட விதிகளின்படி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு ஆலோசிக்கவுள்ளது.