ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஓபன் ஏஐ வெளியேறலாம் - அல்ட்மேன் அறிவிப்பு

May 25, 2023

ஐரோப்பிய ஒன்றியம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது. அந்த வகையில், “புதிய விதிமுறைகளுக்கு உட்படாத நிலையில், ஐரோப்பாவில் இருந்து வெளியேற நேரலாம்” என்று ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன் தெரிவித்துள்ளார். “உலகிலேயே முதல் முறையாக, ஐரோப்பிய ஒன்றியம், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கான முதல் கட்ட விதிமுறைகளை வகுத்து வருகிறது. அதன்படி, சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் இயங்க வேண்டும். எனவே, சாட் ஜிபிடி […]

ஐரோப்பிய ஒன்றியம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான புதிய விதிமுறைகளை வகுத்து வருகிறது. அந்த வகையில், “புதிய விதிமுறைகளுக்கு உட்படாத நிலையில், ஐரோப்பாவில் இருந்து வெளியேற நேரலாம்” என்று ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

“உலகிலேயே முதல் முறையாக, ஐரோப்பிய ஒன்றியம், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கான முதல் கட்ட விதிமுறைகளை வகுத்து வருகிறது. அதன்படி, சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் இயங்க வேண்டும். எனவே, சாட் ஜிபிடி இயக்கம் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்குமா என்பதை ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் மூலம் கண்டறிந்து, ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். மேலும், பொது சட்ட திட்டங்களுக்குள் சாட்ஜிபிடி யின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து யோசனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu