ஓபன் ஏஐ நிறுவன ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு ஒன்று மனித குலத்துக்கு ஆபத்தாக அமையலாம் என எச்சரித்துள்ளனர்.ஓபன் ஏஐ நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், அதன் நிர்வாகக் குழுவுக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில், அதிசக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு ஒன்று, மனித குலத்துக்கு ஆபத்தாக அமையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்துக்கு பிறகு, ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தாங்களும் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக கூறிய நிலையில், மீண்டும் அவர் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டார். Q* என்று அழைக்கப்படும் அதிக திறன் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு திட்ட தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது தொடர்பாக எழுந்த சர்ச்சையே, இந்த சம்பவங்களுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.தற்போது வெளியாகி உள்ள இந்த செய்தி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














