ஒரு நிமிட வீடியோக்களை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு சாதனம் - ஓபன் ஏஐ அறிமுகம்

February 16, 2024

சாட் ஜிபிடி யை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம், புதிதாக சோரா என்ற செயற்கை நுண்ணறிவு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம், எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப, ஒரு நிமிடம் வரை ஓடக்கூடிய வீடியோக்களை உருவாக்கும் என சொல்லப்பட்டுள்ளது. சோரா செயற்கை நுண்ணறிவு சாதனம், எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்படும் கட்டளைகளை, தத்ரூபமான காட்சிகளாக்கி வீடியோ வடிவில் கொடுக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நிமிட வீடியோக்களை, சாம் ஆல்ட்மேன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் […]

சாட் ஜிபிடி யை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம், புதிதாக சோரா என்ற செயற்கை நுண்ணறிவு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம், எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப, ஒரு நிமிடம் வரை ஓடக்கூடிய வீடியோக்களை உருவாக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

சோரா செயற்கை நுண்ணறிவு சாதனம், எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்படும் கட்டளைகளை, தத்ரூபமான காட்சிகளாக்கி வீடியோ வடிவில் கொடுக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நிமிட வீடியோக்களை, சாம் ஆல்ட்மேன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஜெனரேடிவ் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம் இனிவரும் நாட்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu