புதுச்சேரியில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருக்கிறார். காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதால் பாடப்புத்தகம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜூன் 1ம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.