இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்னும் திட்டத்தை நடைமுறைபடுத்த உள்ளது.
இஸ்ரேலில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவதற்காக ஆப்ரேஷன் அஜய் எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட இருக்கின்றனர். இதில் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள் மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.