பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

January 6, 2024

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து 3145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி பொங்கல், 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 17ஆம் தேதி காணும் பொங்கல் என தொடர் விடுமுறை நாட்கள் வருகிறது. இவை தவிர சனி மற்றும் ஞாயிறு ஆகியவை வார விடுமுறை தொடர்ந்து வருவதால் இம்முறை ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது. பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் […]

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து 3145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி பொங்கல், 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 17ஆம் தேதி காணும் பொங்கல் என தொடர் விடுமுறை நாட்கள் வருகிறது. இவை தவிர சனி மற்றும் ஞாயிறு ஆகியவை வார விடுமுறை தொடர்ந்து வருவதால் இம்முறை ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது. பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து பயணிகள் திரும்ப அவரவர் ஊருக்கு செல்ல 16,17,18 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி 11.1.2024 முதல் 14. 1. 2024 வரை நான்கு நாட்களுக்கு சென்னையிலிருந்து 1460 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், காரைக்குடி ஆகிய இடங்களில் இருந்து 1295 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3145 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 1460 சிறப்பு பேருந்துகளும் பிற தடங்களில் இருந்து 1151 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu