ஆபரேஷன் சிந்தூர் – தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல்!

இந்தியா இன்று அதிகாலை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தானும், ஆக்கிரமிப்பு காஷ்மீரும் உள்ள 9 இடங்களில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியா இன்று அதிகாலை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தானும், ஆக்கிரமிப்பு காஷ்மீரும் உள்ள 9 இடங்களில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. விமானப்படை, கடற்படை, தரைப்படை […]

இந்தியா இன்று அதிகாலை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தானும், ஆக்கிரமிப்பு காஷ்மீரும் உள்ள 9 இடங்களில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது.

காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியா இன்று அதிகாலை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தானும், ஆக்கிரமிப்பு காஷ்மீரும் உள்ள 9 இடங்களில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. விமானப்படை, கடற்படை, தரைப்படை மூன்றும் ஒருங்கிணைந்து நடத்திய இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட அமைப்புகளின் முக்கிய பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்திய ராணுவம் முதல் முறையாக தற்கொலை டிரோன்கள் மற்றும் ஹேமர் வகை குண்டுகளை பயன்படுத்தி நொறுக்கி தீர்த்தது. இந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் திட்டமிட்டு நடத்திய இந்த தாக்குதலால், பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கும் இந்தியாவின் பாதுகாப்பு வலிமை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு, பாகிஸ்தான் ராணுவம் குறிவைக்கப்படவில்லை என்றும், நீதிக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu