ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி, ஸ்மார்ட் டிவிகளுக்கு புதிய ஓஎஸ் - இயங்குதளம் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம், மும்பை ஐஐடியுடன் இணைந்து பாரத் ஜிபிடி உருவாக்கத்தில் ஈடுபட்டு வருவதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக பாரத் ஜிபிடி இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், தொலைக்காட்சிகளில் ஜியோ நிறுவனத்தின் சொந்த இயங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். விரைவில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஸ்மார்ட் டிவிகளுக்கான பிரத்தியேக இயங்குதளத்தை அறிமுகம் செய்யும் என கூறியுள்ளார். இது தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் வரலாற்றில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.