நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பில் நெல்சன், அண்மையில், “சீனா நிலவில் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறது” என்ற சர்ச்சை கருத்தை கூறினார். இதற்கு பதிலடி தரும் வகையில், வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர், “விண்வெளியை ஆக்கிரமிப்பு செய்வதற்கு அது ஒன்றும் மல்யுத்தம் மைதானம் அல்ல. விண்வெளியில் மனித இனத்தின் ஒருங்கிணைந்த எதிர்காலத்திற்காகவே சீனா பணியாற்றி வருகிறது. விண்வெளியில் ஆயுதப் போராட்டம் செய்ய சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க ராணுவ அதிகாரிகள், “சீனா விண்வெளியை ராணுவ மயமாக்குகிறது” என்று குற்றம் சாட்டினர். இந்நிலையில், தற்போதைய இந்த சம்பவத்தின் மூலம், அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான விண்வெளி போர் தீவிரமடைந்து உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், நிலவில், யார் முதலில் ஆய்வகம் அமைப்பது என்பதில் இரு நாடுகளுக்கும் இடையே பந்தயம் ஏற்பட்டுள்ளது.