அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது தேடுபொறியான பிங்க் தளத்துடன் ஓபன் ஏஐ நிறுவனம் தயாரித்துள்ள சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை இணைத்துள்ளதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து, பிங்க் தளத்தில், புதிதாக 1 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உள்நுழைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 48 மணி நேரத்தில், 1 பில்லியன் பேர் உள்நுழைவு செய்ததை மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி மற்றும் கார்ப்பரேட் பிரிவு துணைவேந்தரான யூசுப் மெஹதி, இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிங்க் தளத்துடன் இணைப்பதற்கு முன்பாக, சாட் ஜிபிடி, தன்னிச்சையாகவே, 2 வாரங்களில் 1 மில்லியன் பயனர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிங்க் தேடுபொறி மட்டுமல்லாது, மைக்ரோசாப்ட் எட்ஜ் தளத்திலும் சாட் ஜிபிடி தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, மைக்ரோசாப்ட் தளங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.