பிரிட்டன் அருங்காட்சியகத்தில் விலை மதிப்பு மிக்க பொருட்கள் திருட்டு

August 22, 2023

லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் அருங்காட்சியகத்தில் திருட்டு நடைபெற்றுள்ளது. பிரிட்டன் அருங்காட்சியகத்தில், பழங்கால நகைகள், கண்ணாடிகள், வைரக் கற்கள் போன்ற விலைமதிப்புமிக்க பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. மிகவும் பாதுகாப்பான முறையில் இவை கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அண்மைக்காலத்தில், அருங்காட்சியகம் சார்பில் கண்காட்சிகளும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், திருட்டு நடைபெற்று உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் மில்லியன் கணக்கில் மதிப்புடைய ரோமானிய பொருட்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் அருங்காட்சியகத்தில் திருட்டு நடைபெற்றுள்ளது.

பிரிட்டன் அருங்காட்சியகத்தில், பழங்கால நகைகள், கண்ணாடிகள், வைரக் கற்கள் போன்ற விலைமதிப்புமிக்க பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. மிகவும் பாதுகாப்பான முறையில் இவை கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அண்மைக்காலத்தில், அருங்காட்சியகம் சார்பில் கண்காட்சிகளும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், திருட்டு நடைபெற்று உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் மில்லியன் கணக்கில் மதிப்புடைய ரோமானிய பொருட்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவத்தில், அருங்காட்சியகத்தின் மூத்த கண்காணிப்பாளர் பீட்டர் ஹிக்ஸ் உடந்தையாக கருதப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அருங்காட்சியக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 50 ஆயிரம் பவுண்ட் மதிப்புள்ள ரோமானிய பொருள் 40 பவுண்டுக்கு விற்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருவதாகவும், திருடப்பட்ட பொருட்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu