வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேசத்தின் தூதர்கள்: பிரதமர் மோடி 

January 10, 2023

‘அந்நிய நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களே நம்முடைய தேச தூதர்கள்’ என பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ம் தேதி ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு நேற்று நடந்தது. அப்போது பேசிய பிரதமர் மோடி, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை இந்த தேசத்தின் தூதர்களாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் தனித்துவமான உலகளாவிய பார்வை […]

‘அந்நிய நாடுகளில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களே நம்முடைய தேச தூதர்கள்’ என பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ம் தேதி ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு நேற்று நடந்தது. அப்போது பேசிய பிரதமர் மோடி, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை இந்த தேசத்தின் தூதர்களாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் தனித்துவமான உலகளாவிய பார்வை மற்றும் உலகளாவிய கொள்கைகளில் இந்தியாவின் முக்கிய பங்களிப்பு உங்களால் பலப்படுத்தப்படும்.

இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் இந்திய புலம்பெயர்ந்தோர் அசாதாரணமாக பங்களிப்பை செய்துள்ளனர். நம் தேசத்தின் கலாச்சார, ஆன்மீக அறிவையும், வளர்ந்து வரும் திறன் மற்றும் முன்னேற்றத்தை பற்றி உலகெங்கிலும் பகிருங்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிய அரசு நிறைவேற்றித் தரும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu