கடந்த 6 ஆண்டுகளில் கோடிக்கணக்கான சொத்துக்கள் குவித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பஜ்வா

November 21, 2022

கடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் கடுமையாக உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவடைய உள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் அஹ்மத் நூரானி கூறுகையில், கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் சர்வதேச வணிகத்தைத் தொடங்கி உள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் பண்ணை வீடுகளை […]

கடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் கடுமையாக உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவடைய உள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் அஹ்மத் நூரானி கூறுகையில், கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் சர்வதேச வணிகத்தைத் தொடங்கி உள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் பண்ணை வீடுகளை வாங்கி உள்ளனர். மேலும் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி அதிக பணம் சம்பாதித்தனர் என்றார். பஜ்வாவின் மனைவி ஆயிஷா அம்ஜத், அவரது மருமகள் மஹ்னூர் சபீர் மற்றும் பிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் நிதி அதிகரித்து உள்ளது.

ஆறு ஆண்டுகளில், இரு குடும்பங்களும் கோடீஸ்வரர்களாகி, தங்கள் மூலதனத்தை வெளிநாடுகளுக்கு மாற்றத் தொடங்கினர். இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூரில் விலை மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளனர். பாகிஸ்தானுக்குள்ளும் வெளியிலும் கடந்த ஆறு ஆண்டுகளில் பாஜ்வா குடும்பத்தால் திரட்டப்பட்ட சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.12,700 கோடிக்கும் அதிகமாகும் என்று அறிக்கை கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu