பாகிஸ்தான் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ யின் முன்னாள் தலைவர் ஹபீஸ் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 2019 முதல் 2021 வரை உளவு அமைப்பின் தலைவராக இருந்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 2023 ஆம் ஆண்டு குடியிருப்பு திட்டம் தொடர்பாக ஊழல் வழக்கு போடப்பட்டது. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஹபீஸ் ஹமீதுவை ராணுவம் கைது செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அதே சமயத்தில் ஹமீது மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியுள்ளது என்று ராணுவம் கூறியுள்ளது.














