பாகிஸ்தானை சேர்ந்த காபந்து வர்த்தகத் துறை அமைச்சர் கோகர் இஜாஸ், அந்நாட்டின் காபந்து உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவருக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் சர்பராஸ் புக்தி, தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த மாதம் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து அவர் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட களம் இறங்கி உள்ளார். எனவே, கோகர் இஜாஸ் -ன் நியமனம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோகர் இஜாஸ், பாகிஸ்தானின் 48வது உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ள பாகிஸ்தான் தேர்தல் வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.