சீனாவின் பீஜிங் நகரில் உள்ள இரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவருக்கு பலத்த காயமும், ஒருவர் காணாவில்லை என்று தகவல்கள் வெளியாகி் வருகின்றன. இந்த சம்பவம் இரசாயன ஆலையினுள் ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்தி செய்யும் பகுதியில் நடைபெற்று இருக்கிறது. விபத்து ஏற்பட்ட இரசாயன ஆலை ஷாங்டாங் மாகாணத்தின் லியோசெங் பகுதியில் அமைந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கர வெடி விபத்து என்ற போதிலும், இரசாயன ஆலையில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. விபத்தில் காயமுற்றோருக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து நடந்த இரசாயன ஆலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.