இம்ரான் கான் கட்சிக்கு தடைவிதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு

March 20, 2023

இம்ரான் கான் தலைமையிலான கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜரானார். அந்த சமயம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் […]

இம்ரான் கான் தலைமையிலான கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜரானார். அந்த சமயம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரது வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான தொண்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், இம்ரான் கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமான தொணடர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏராளமான இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் இம்ரான் கான் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரது தலைமையிலான கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu