இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தக்காளி, வெங்காயம் இறக்குமதி செய்கிறது.

August 29, 2022

விலை ஏற்றம் காரணமாக இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை பாகிஸ்தான் இறக்குமதி செய்கிறது. லாகூர் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் பிற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியாவில் இருந்து தக்காளி மற்றும் வெங்காயத்தை இறக்குமதி செய்யக்கூடும் என்று இங்குள்ள சந்தை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்துலாகூர் சந்தையின் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை, லாகூர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி மற்றும் வெங்காயம் […]

விலை ஏற்றம் காரணமாக இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை பாகிஸ்தான் இறக்குமதி செய்கிறது.

லாகூர் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் பிற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியாவில் இருந்து தக்காளி மற்றும் வெங்காயத்தை இறக்குமதி செய்யக்கூடும் என்று இங்குள்ள சந்தை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்துலாகூர் சந்தையின் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை, லாகூர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி மற்றும் வெங்காயம் முறையே ரூ.500 மற்றும் ரூ.400க்கு கிடைத்தன. இருப்பினும், ஞாயிறு சந்தைகளில் இரண்டு பொருட்களும் வழக்கமான சந்தைகளில் கிடைப்பதை விட கிலோவுக்கு ரூ. 100 குறைவாகவே கிடைத்தன," என்றார். மேலும் அவர் , 'வெள்ளம் காரணமாக பலுசிஸ்தான், சிந்து மற்றும் தெற்கு பஞ்சாப் பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் பொருட்களின் விலை மேலும் உயரும். வரும் நாட்களில், வெங்காயம், தக்காளி விலை, 700 ரூபாயை தாண்டும். அதேபோல், உருளைக்கிழங்கு விலையும், கிலோவுக்கு, 40 ரூபாயில் இருந்து, 120 கிலோவாக அதிகரித்துள்ளது' என்றார்.

இதற்கிடையில் இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக வெங்காயம் மற்றும் தக்காளியை இறக்குமதி செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu