பாகிஸ்தானில் பேருந்து விபத்து ஒன்றில் குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பயணிகள் பேருந்து ஒன்று துர்பத் பகுதியில் இருந்து குவேட்டா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது வாசக் நகர் அருகே பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 28 பேர் பலியாகி உள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டது இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் பேருந்தின் டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக சிலர் கூறுகின்றனர். இந்த விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சாலை விபத்துகள் அதிகம் நேர்கின்றன. இதற்கு காரணம் போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை போக்குவரத்து துறை கடைபிடிக்காதது தான். இந்த மாதத்தில் மட்டும் கடந்த நாட்களில் 33 பேர் சாலை விபத்துகளில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.














