பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷெபாஸ் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ், 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்தபோது, சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தை தனது தம்பி சுலேமானுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் ரூ.6 கோடி வரை மோசடி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெபாஸ் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் இருவரும் […]

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷெபாஸ் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ், 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்தபோது, சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தை தனது தம்பி சுலேமானுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் ரூ.6 கோடி வரை மோசடி நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெபாஸ் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டது. ஆனால் புகார்தாரர் வழக்கை வாபஸ் பெற அறிவித்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷெபாஸ் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu