பாகிஸ்தான் - கவுடர் துறைமுக நகரத்தில் 144 தடை

December 29, 2022

பாகிஸ்தானில் உள்ள கவுடர் துறைமுக நகரத்தில் Haq-Do-Tehreek (HDT) போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின் போது, காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், அங்கு 144 தடை விதிக்கப்படுவதாக பலுசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் சியோஅல்லா லங்கோவே தெரிவித்துள்ளார். இந்த தடை காரணமாக, அங்கு, போராட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், அரசுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. HDT போராட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்க […]

பாகிஸ்தானில் உள்ள கவுடர் துறைமுக நகரத்தில் Haq-Do-Tehreek (HDT) போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின் போது, காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், அங்கு 144 தடை விதிக்கப்படுவதாக பலுசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் சியோஅல்லா லங்கோவே தெரிவித்துள்ளார். இந்த தடை காரணமாக, அங்கு, போராட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், அரசுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HDT போராட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்க கான்ஸ்டபிள் யாசிர் சையத் பணியில் இருந்தார். அப்போது போராட்டக்காரர்களால் அவர் தாக்கப்பட்டார். அவரது உயிரிழப்புக்கு HDT தலைவர் மௌலானா இதயத் அர் ரஹ்மான் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் லங்கோவே உத்தரவிட்டுள்ளார். இந்தப் போராட்டம் தொடர்பாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், 80 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu