2025 ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.
பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி நடத்துவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஐ.கா அஷ்ரப், ஐசிசி பொது ஆலோசகர் ஜனாதன் ஹால் ஆகியோர் கையெழுத்திட்டு உள்ளனர். இதற்கு 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி நடத்திய பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்த போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.














