பாகிஸ்தான் ராணுவம் நவீன ரக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் அவ்வப்போது தலைதூக்கி வருகிறது. இதனை ஒடுக்க அரசாங்கம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் ராணுவம் நவீன மயமாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு சீனா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி சீனா சக்தி வாய்ந்த உபகரணங்களை பாகிஸ்தானுக்கு அளித்து வருகிறது. அப்படி அளித்த மூன்று சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நேற்று நவீன பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக செய்து முடித்தது. இதன் மூலம் ராணுவத்தின் திறனை சோதனை செய்து பார்த்ததாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்த விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வின், இடைக்கால பிரதமர் கக்கர் ஆகியோர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.