பாகிஸ்தான்: வாராந்திர பணவீக்க விகிதம் வரலாறு காணாத உச்சம்

September 3, 2022

பாகிஸ்தானின் பணவீக்கம் கடந்த வாரத்தில் மட்டும் 1.31% உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் பணவீக்க விகிதம், கடந்த 10 ஆண்டுகளின் உச்ச நிலையை, இந்த வாரத்தில் எட்டி உள்ளதாக, பாகிஸ்தானின் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த வருட செப்டம்பர் மாத பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில், இது 45.5% உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பாகிஸ்தான், வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால், விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. […]

பாகிஸ்தானின் பணவீக்கம் கடந்த வாரத்தில் மட்டும் 1.31% உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

பாகிஸ்தானின் பணவீக்க விகிதம், கடந்த 10 ஆண்டுகளின் உச்ச நிலையை, இந்த வாரத்தில் எட்டி உள்ளதாக, பாகிஸ்தானின் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த வருட செப்டம்பர் மாத பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில், இது 45.5% உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பாகிஸ்தான், வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால், விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. வெள்ளத்தின் காரணமாக, தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. வெங்காயம், தக்காளி, முட்டை உள்ளிட்ட 31 அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும், வெங்காய விலையில் 42.17 சதவீத உயர்வும், தக்காளி விலையில் 13.25 சதவீத உயர்வும், பச்சைப்பயறு விலையில் 7.94% உயர்வும், உருளைக்கிழங்கு விலையில் 6.97% உயர்வும், முட்டை விலையில் 3.84 சதவீத உயர்வும், கோழிக்கறி விலையில் 3.25 சதவீத உயர்வும், கோதுமை மாவு விலையில் 1.49 சதவீத உயர்வும் காணப்படுவதாக அரசாங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், எரிவாயு விலை 4.45 சதவீதமும், டீசல் விலை 1.19 சதவீதமும், பெட்ரோல் விலை 0.88 சதவீதமும் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறைந்த வருமான வர்க்கத்திற்கான உணர்திறன் குறியீட்டு எண் எனப்படும் சென்சிட்டிவ் பிரைஸ் இன்டெக்ஸ், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் 1.63 சதவீதம் உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு தற்போதைய பேரிடர் சூழலே காரணமாக உள்ளது. வரலாறு காணாத இந்த வெள்ளத்தால், மூன்றில் ஒரு பங்கு நாடு நீரில் மூழ்கியுள்ளது என்றும், 33 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து மீண்டு வர, அந்நாட்டிற்கு பல உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu