காசா போர் தீவிரம் - பாலஸ்தீன பிரதமர் ராஜினாமா

February 26, 2024

பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டையே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காசா பகுதியில் ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. தெற்கு காசாவில் தீவிர தரைவழி தாக்குதலை நடத்த உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புகள் வாழும் மேற்கு கரை பகுதிகளை பாலஸ்தீனம் நிர்வாகம் செய்து வருகிறது. இப்போது காசாவில் 30 ஹமாஸ் தீவிரவாதிகளை ஒரே நாளில் இஸ்ரேல் ராணுவம் […]

பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டையே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காசா பகுதியில் ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. தெற்கு காசாவில் தீவிர தரைவழி தாக்குதலை நடத்த உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புகள் வாழும் மேற்கு கரை பகுதிகளை பாலஸ்தீனம் நிர்வாகம் செய்து வருகிறது. இப்போது காசாவில் 30 ஹமாஸ் தீவிரவாதிகளை ஒரே நாளில் இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இந்நிலையில், தனது தலைமையிலான அரசை கலைத்து விட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முகமது விருப்பம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை பாலஸ்தீன அதிபர் முஹம்மத் அப்பாஸிடம் சமர்ப்பித்துள்ளார். தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கடும் தாக்குதலை நடத்தி வருவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். காசா போர் முடிந்த பின்பு பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைய வேண்டும். அதுவே சிறந்ததாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக முகமது இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாலஸ்தீனத்தில் அமெரிக்கா ஆதரவுடன் புதிய அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu