பாலஸ்தீனியர்கள் காசாவின் வடக்கு பகுதிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் 15 மாதங்களுக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இரு தரப்பும் போர் நிறுத்தம் ஒப்புக்கொண்ட நிலையில், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். முதல் கட்டமாக, ஹமாஸ் 3 பெண் பணயக் கைதிகளை விடுத்து, இரண்டாவது கட்டத்தில் 4 இஸ்ரேல் பெண் கைதிகளை விடுவித்தது. இஸ்ரேல் 200 பாலஸ்தீனிய கைதிகளை விடுத்தது. ஒப்பந்தப்படி, அர்பெல் யாஹுட் என்ற பெண் விடுதலை செய்யப்படவில்லை. இதனால் ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பின்னர், பேச்சுவார்த்தையில் 6 பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் உடன்பட்டது. இன்று, பாலஸ்தீனியர்கள் காசாவின் வடக்கு பகுதிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.