பாரீசில் நடைபெறும் டென்னிஸ் தொடரில் ஆண்ட்ரூ ரூப்லெவ் மற்றும் மேட்டியோ பெரேட்டினி ஆகியோர் தோல்வியடைந்தனர்.
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரூ ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார். இதில் ரூப்லெவ் 6-7 (6-8), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். அதேபோல், மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார். இதில் பெரேட்டினி 5-7, 6-7 (2-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.