பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த வினேஷ் போகத், அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் 50 கிலோ மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த வினேஷ், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார். ஆனால், எடை சோதனையில் வெறும் 100 கிராம் அதிகமாக இருந்ததால், அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த திடீர் திருப்பம், ஒலிம்பிக் பதக்க கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களையும் நொறுக்கியது. “வினேஷ் போகத் இந்தியாவின் பெருமை. அவர் சந்தித்த இந்த பின்னடைவு தற்காலிகமானது. அவர் மீண்டும் எழுந்து, நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பணியை தொடர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் வினேஷுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.