சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய ஒப்பந்தம் செய்யப்படும் வரை பொதுமக்கள் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஜூலை 2025ஆம் தேதி உடன், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்துடன் வாகன நிறுத்த கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் புதிய ஒப்பந்தம் செய்யப்படும் வரை, எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. பொதுமக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்தும் வகையில் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு முறைகேடுகளும் ஏற்பட்டால், 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.