கடல் சீற்றத்தால் பயணிகள் கப்பல் சேவை ரத்து

October 15, 2024

நாகப்பட்டினத்தில் பயணிகள் கப்பல் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் 4 நாட்கள் பயணிகள் கப்பல் சேவை செயற்படுகிறது. ஆனால், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைகள் விடுத்துள்ளது. இதனால், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று மற்றும் 17-ந் தேதி […]

நாகப்பட்டினத்தில் பயணிகள் கப்பல் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் 4 நாட்கள் பயணிகள் கப்பல் சேவை செயற்படுகிறது. ஆனால், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைகள் விடுத்துள்ளது. இதனால், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று மற்றும் 17-ந் தேதி ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க, கடல் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu