ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பெயர் ஆந்திராவில் அமைச்சரவை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
ஆந்திராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 175 இடங்களைக் கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இன்று அவர் ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார். இப்பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவி ஏற்க உள்ள 24 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாணுக்கு பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது