பேடிஎம் மூன்றாம் தரப்பு யுபிஐ செயலியாக செயல்பட அனுமதி

March 15, 2024

பேடிஎம் நிறுவனத்துக்கு மூன்றாம் தரப்பு யுபிஐ செயலியாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, யுபிஐ பரிவர்த்தனைகளின் போது வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான இணைப்பை பேடிஎம் நிறுவனம் செயல்படுத்தலாம். இதற்கான அனுமதியை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் வழங்கியுள்ளது. பேடிஎம் செயலி மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை கட்டமைப்பை வழங்குவதற்கு, பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை செயல்படும் என கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்கான வர்த்தக கையக வங்கியாக எஸ் வங்கி […]

பேடிஎம் நிறுவனத்துக்கு மூன்றாம் தரப்பு யுபிஐ செயலியாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, யுபிஐ பரிவர்த்தனைகளின் போது வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான இணைப்பை பேடிஎம் நிறுவனம் செயல்படுத்தலாம். இதற்கான அனுமதியை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் வழங்கியுள்ளது.

பேடிஎம் செயலி மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை கட்டமைப்பை வழங்குவதற்கு, பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை செயல்படும் என கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்கான வர்த்தக கையக வங்கியாக எஸ் வங்கி இருக்கும். அதன்படி, பேடிஎம் யு பி ஐ முகவரியை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, அது எஸ் வங்கியை சென்றடையும். இந்த செய்தி வெளியான பிறகு, இன்றைய வர்த்தகத்தில் பேடிஎம் பங்குகள் 5% அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu