பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், நவம்பர் மாதத்தில் வருடாந்திர கடன் வழங்கல் விகிதம் 4.8 பில்லியன் டாலர்கள் மதிப்பில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், மொத்தமாக வழங்கப்பட்டுள்ள கடன்களின் மதிப்பு, வருடாந்திர அடிப்படையில் 374% உயர்ந்து, 6292 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை வழங்கப்பட்டுள்ள கடன்களின் எண்ணிக்கை 150% உயர்ந்து, 6.8 மில்லியனாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பேடிஎம் நிறுவனம், பொதுப் பங்கீட்டுக்கு வழங்கப்பட்ட பங்குகளை மீண்டும் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்கான முடிவுகளை எடுக்க, நிறுவனத்தின் நிர்வாகக் குழு சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த காலாண்டில், பேடிஎம் நிறுவனம், 76% வருவாய் உயர்வைப் பதிவு செய்திருந்தது கவனிக்கத்தக்கது.