வணிகர்களுக்கான நீண்ட கால வரி நிலுவைகளை எளிய முறையில் வசூலிக்கும் சமாதான திட்டத்தை தற்போது மீண்டும் முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மதிப்பு கூட்டு வரி சட்டம் 2006ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு விற்பனை சார்ந்த சட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டது. இதில் 1999இல் வணிகர்களிடமிருந்து வரி நிலுவையை எளிதாக வசூலிக்கும் சமாதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடர்ந்து 2002, 2006,2008, 2010,2011 ஆண்டுகளில் செலுத்தப்பட்டு வணிகர்களின் வரி நிலுவைகள் கணிசமாக குறைக்கப்பட்டது.
தற்போது இந்த திட்டத்தை மீண்டும் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கான அறிவிப்பை கடந்த பத்தாம் தேதி சட்டசபையில் வெளியிட்டிருந்த நிலையில் சுமார் 25,000 கோடி அளவுக்கான வரி நிலுவை வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 147 கோடி நிலுவை தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எளிய வணிகர்கள் பயன்பெருகின்றனர்.














