கழிவுநீர்த் தொட்டிக்குள் மரணிக்கும் மனிதர்கள்: இந்திய அளவில் தமிழகம் 2-வது இடம்

August 25, 2022

  கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மரணித்தவர்களின் பட்டியலில் இந்திய அளவில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 218 பேர் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 32 பேர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 1993-ம் ஆண்டு முதல் கடந்த 2022 ஜூன் மாதம் 30-ம் […]

 

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மரணித்தவர்களின் பட்டியலில் இந்திய அளவில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 218 பேர் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 32 பேர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 1993-ம் ஆண்டு முதல் கடந்த 2022 ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது 966 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில், அதிபட்சமாக தமிழகத்தில் 218 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 207 பேருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் 136 பேர், உத்தரப் பிரதேசத்தில் 105 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu