பீகாரில் தெரு நாய் கடித்து 80 பேர் பாதிப்பு

January 28, 2023

பீகார் மாநிலத்தின் அராஹ் நகரில், நேற்று முன் தினம் தெரு நாய் கடித்து 80 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரையும் ஒரே நாய் கடித்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அதிகாரிகள் தெரு நாயைப் பிடிக்க தனி குழு ஒன்றை அனுப்பினர். ஆனால், அதற்குள், அந்தப் பகுதி மக்களே நாயை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய மருத்துவமனை மேலாளர் கவுஷல் துபே, "தெரு நாய் […]

பீகார் மாநிலத்தின் அராஹ் நகரில், நேற்று முன் தினம் தெரு நாய் கடித்து 80 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரையும் ஒரே நாய் கடித்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அதிகாரிகள் தெரு நாயைப் பிடிக்க தனி குழு ஒன்றை அனுப்பினர். ஆனால், அதற்குள், அந்தப் பகுதி மக்களே நாயை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய மருத்துவமனை மேலாளர் கவுஷல் துபே, "தெரு நாய் கடித்த காயங்களுடன் சுமார் 86 பேர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, ராபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அன்றைய தினம், குடியரசு தின விடுமுறையாக இருந்த போதும், மாவட்ட அதிகாரியின் உத்தரவின் பெயரில் மருத்துவமனையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu