அமோனியா வாயுவை சுவாசித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சளி காய்ச்சல்

December 29, 2023

சென்னை எண்ணூரில் உள்ள உரத் தொழிற்சாலையில் திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது சென்னை எண்ணூர் பெரிய குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு அமோனிய திரவம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 12,500 டன் கொள்திறன் கொண்ட சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவை கப்பல் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு எண்ணூர் சிறு துறை முகத்தில் இருந்து குழாய்கள் மூலமாக சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் […]

சென்னை எண்ணூரில் உள்ள உரத் தொழிற்சாலையில் திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது
சென்னை எண்ணூர் பெரிய குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு அமோனிய திரவம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 12,500 டன் கொள்திறன் கொண்ட சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவை கப்பல் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு எண்ணூர் சிறு துறை முகத்தில் இருந்து குழாய்கள் மூலமாக சேமிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் நள்ளிரவு குழாயில் கசிவு ஏற்பட்டு அம்மோனிய வாயு வெளியேறியது. இதனால் அருகில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், வாந்தி மயக்கம் ஆகியவை ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட 60 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்து நுரையீரல் நிபுணர்களைக் கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு தற்போது அமோனியா கசிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் நிரந்தரமாக தொழிற்சாலைகளை மூடக்கோரி 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டாலும் நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu