பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் பிரேசிலில் உள்ள ஓடேபெக்ட் கட்டுமான நிறுவனத்துடன் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையின் போது, டோலிடோ இந்நிறுவனத்தில் பல லட்சம் டாலர் லஞ்சம் பெற்றதாக தெரியவந்தது. நெடுஞ்சாலை அமைப்பதற்காக 35 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாக டோலிடோ மீது அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 2001-2006 காலத்தில் பெருவின் அதிபராக இருந்த டோலிடோ மீது அமெரிக்கா நடத்திய விசாரணையின் மூலம், மெக்சிகோ, குவாதமாலா மற்றும் ஈகுவடாரில் கூட வழக்குகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த விசாரணையில், டோலிடோ உள்பட 4 முன்னாள் அதிபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், டோலிடோ இந்த ஊழல் குற்றங்களை மறுத்துள்ளார்.