தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை முதலமைச்சர்கள் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் ஒரு கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் தகுதியுள்ள ஒரு கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 242 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம்தோறும் அவர்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 11,85,000 பெண்கள் மேல்முறையீடு செய்தனர்.இதில் 7 லட்சத்து 35 ஆயிரத்து 58 பயனாளிகள் தகுதி உடையவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களின் பெயரில் ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. தற்போது இந்நிகழ்வின் இரண்டாவது கட்ட தொடக்க விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கலைஞர் உரிமைதொகை வழங்கும் திட்டம் நடைபெற்றது.