போன் பே, வால்மார்ட் குழுமத்தைச் சேர்ந்த ஒ௫ டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் . இது தன் தலைமையகத்தை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான பிலிப் கார்ட் , அதன் தலைமையகம் சிங்கபூரிலேயே தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்துள்ளது . இது குறித்து ௯றிய போன் பே நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், நிறுவனம் தன் தலைமை அலுவலகத்தை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது எனக் கூறினார். மேலும் இது பற்றி பிலிப் கார்ட் -க்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை என்று கூறினார். தற்போது பிலிப் கார்ட் -ன் நிதிநிலை 700 மில்லியன் டாலர்களாகும். அதேபோல் போன் பே- வின் நிதிநிலை மதிப்பு 5.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இந்நிலையில் நிதிநிலையை உயர்த்துவதற்காக அக்டோபர் 2020 இல் பிலிப் கார்ட் , போன் பே -வை சற்று முடக்கியது. இ௫ப்பினும் போன் பே, 100 மில்லியன் மாதாந்திர வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உருவாக்கி, அதன் பயனர் மதிப்பை 250 மில்லியனுக்கும் அதிகமாக பதிவு செய்துள்ளது.