ஜெனரல் அட்லாண்டிக் இடம் இருந்து 100 மில்லியன் டாலர்கள் நிதி - போன் பே

April 12, 2023

டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில் போன் பே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனத்திற்கு ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திடம் இருந்து 100 மில்லியன் டாலர்கள் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. ஜெனரல் அட்லாண்டிக், உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திடம் இருந்து மேலும் நிதியை பெற்றுள்ளதால், போன் பே நிறுவனத்திற்கு, மொத்தமாக, 1.45 பில்லியன் டாலர்கள் நிதி கிடைக்க பெற்றுள்ளது. தற்போதைய 100 மில்லியன் டாலர்களுக்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில், 350 மில்லியன் […]

டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில் போன் பே நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனத்திற்கு ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திடம் இருந்து 100 மில்லியன் டாலர்கள் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. ஜெனரல் அட்லாண்டிக், உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திடம் இருந்து மேலும் நிதியை பெற்றுள்ளதால், போன் பே நிறுவனத்திற்கு, மொத்தமாக, 1.45 பில்லியன் டாலர்கள் நிதி கிடைக்க பெற்றுள்ளது. தற்போதைய 100 மில்லியன் டாலர்களுக்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில், 350 மில்லியன் டாலர்கள் நிதியை போன் பே நிறுவனம் பெற்றிருந்தது. ஜெனரல் அட்லாண்டிக் தவிர, டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், ரிப்பிட் கேப்பிட்டல், டிவிஎஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 100 மில்லியன் டாலர்களை போன் பே பெற்றுள்ளது. இது தவிர, வால்மார்ட் நிறுவனத்திடம் இருந்து பிரத்யேகமாக, 200 மில்லியன் டாலர்கள் நிதி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu