ஆன்லைனில் நவீன முறையில் சேவல் சண்டை நடத்த திட்டம்

January 4, 2023

ஆன்லைனில் நவீன முறையில் சேவல் சண்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேவல் சண்டை அமைப்பாளர்கள் பொங்கல் பண்டிகை அன்று சேவல் சண்டைகளை ஆன்லைனில் நடத்த திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக ஜிஇ 5 கி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். தற்போது சேவல் சண்டை சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனர். சண்டையை தொடங்குவதற்கு முன்பு சேவல்களின் விவரங்கள் ஆன்லைனில் […]

ஆன்லைனில் நவீன முறையில் சேவல் சண்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்துள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சேவல் சண்டை அமைப்பாளர்கள் பொங்கல் பண்டிகை அன்று சேவல் சண்டைகளை ஆன்லைனில் நடத்த திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக ஜிஇ 5 கி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போது சேவல் சண்டை சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனர். சண்டையை தொடங்குவதற்கு முன்பு சேவல்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவிடப்படுகின்றன. வெற்றி பெற்ற சேவல்கள் மீது ஆன்லைனில் பந்தயம் கட்டியவர்களுக்கு அமைப்பாளர்களின் கமிஷன் பிடித்துக் கொண்டு பணம் கட்டியவர்களின் வங்கிக் கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என கூறப்படுகிறது. சேவல் சண்டைக்கு ரூ.1000 கோடி வரை பந்தயம் கட்ட ஏற்பாடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu