ஜப்பானில் பயணிகள் விமானத்துடன் காவல் கடலோர காவல் படை விமானம் மோதியதில் இரு விமானங்களும் தீக்கிரையாகின.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமானத்துடன் கடலோர காவல் படை விமானம் மோதியதில் இரு விமானங்களும் தீக்கிரையாகின. இந்த விபத்தில் பயணிகள் விமானத்திலிருந்த 379 பேர் உயிர் தப்பினர். கடலோர காவல் படை விமானத்தில் இருந்த ஐந்து பேர் பலியாகினர்.
ஜப்பானின் போக்கிடா மாகாணம், சிடோஸ் விமான நிலையத்திலிருந்து 379 பயணிகளுடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் பயணித்தது. அது தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹானிடா விமான நிலையத்தில் நேற்று மாலை தரையிறங்க முயன்றது. அப்போது அந்த விமான நிலையத்தில் இருந்து நிலநடுக்க நிவாரண பணிகளுக்காக புறப்பட்ட கடலோர காவல் படைக்கு சொந்தமான சிறிய வகை விமானம் உடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மோதியது. இதில் இரு விமானங்களும் தீப்பிடித்து எறிந்தன. பயணிகள் விமானத்தில் தீப்பிடித்து புகை பரவியது. உடனே அதிலிருந்து பலர் வெளியே குதித்தனர். பிறகு அவசர கால கதவுகள் திறக்கப்பட்டு அது வழியாக எஞ்சியவர்களும் விமானத்திலிருந்து வெளியேறி உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் கடலோர காவல் படை விமானத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர். அதன் விமானி மட்டும் ஆபத்தான தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் இரு விமானங்களும் முற்றிலும் எரிந்து நாசம் ஆகின.














