பூமியுடன் மோதி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 3 விண்கற்கள் கண்டுபிடிப்பு

November 3, 2022

பூமியுடன் மோதி, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையில், பூமியின் நெருங்கிய சுற்றுவட்ட பாதையில், 3 விண்கற்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘தி அஸ்ட்ரோனமிக்கல் ஜர்னல்’ என்ற அறிவியல் ஆய்வு இதழில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்காட் எஸ் ஷெப்பர்ட் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் இந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். எனவே, பூமியை அச்சுறுத்தும் வகையில் உள்ள விண்கற்கள் குறித்த தரவுகளை ஏற்படுத்துவது, மற்றும் சூரிய குடும்பத்தில் உள்ள மொத்த விண்கற்களின் கணக்கெடுப்புகளை விரைவாக நடத்துவது, ஆகியவை குறித்து இந்த […]

பூமியுடன் மோதி, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையில், பூமியின் நெருங்கிய சுற்றுவட்ட பாதையில், 3 விண்கற்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘தி அஸ்ட்ரோனமிக்கல் ஜர்னல்’ என்ற அறிவியல் ஆய்வு இதழில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்காட் எஸ் ஷெப்பர்ட் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் இந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். எனவே, பூமியை அச்சுறுத்தும் வகையில் உள்ள விண்கற்கள் குறித்த தரவுகளை ஏற்படுத்துவது, மற்றும் சூரிய குடும்பத்தில் உள்ள மொத்த விண்கற்களின் கணக்கெடுப்புகளை விரைவாக நடத்துவது, ஆகியவை குறித்து இந்த ஆய்வு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம், பூமியை அச்சுறுத்தும் வகையில் வரும் விண்கற்களை பாதை மாற்றுவதற்கான திட்டத்தில் நாசா வெற்றி கண்டது. அதனைத் தொடர்ந்து இந்த விண்கற்கள் குறித்த செய்தி வெளிவந்துள்ளதால், இது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

டார்க் எனர்ஜி கேமரா மூலம், நவீன தொலைநோக்கி வழியாக, இந்த விண்கற்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த விண்கற்கள் பூமிக்கும் வெள்ளி கிரகத்திற்கும் இடையை உள்ள சுற்றுவட்ட பாதையில் உள்ளன. சூரிய குடும்பத்தின் உள் கட்டமைப்பில் இவை மறைந்து இருந்ததால். இவற்றை கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், சூரியனிலிருந்து வரும் கதிர்கள் இவற்றை மறைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 விண்கற்களில், 2 விண்கற்கள், ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு மேலாக பெரியதாகும். எனவே, இவை “கோள்களை அழிக்கும் விண்கற்கள்” (Planet Killers) என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று விண்கற்களில், 1.5 கிலோமீட்டர் அகலம் உடைய விண்கல், பூமியின் பாதையில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu